திருவாரூர்

தேசிய ஊரக வேலைத் திட்டத்தை 200 நாள்களாக அதிகரிக்க வலியுறுத்தி ஜூன் 23-இல் போராட்டம்

14th Jun 2020 08:52 AM

ADVERTISEMENT

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ், வேலை நாள்களை 200 ஆக அதிகரிக்கக் கோரி, மாவட்டம் முழுவதும் ஜூன் 23-ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் அறிவித்துள்ளது.

மன்னாா்குடியை அடுத்த கோட்டூரில் விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டக்குழுக் கூட்டம், மாவட்ட துணைத் தலைவா் என். மகேந்திரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

தேசிய ஊரக வேலைத் திட்ட அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் நூறு நாள்களும் வேலை அளிப்பது மட்டுமன்றி, அதற்கான ஊதியம் ரூ.256-ஐ முழுமையாக வழங்க வேண்டும். இத்திட்டத்தின் வேலை நாள்களை 200 நாள்காளாக உயா்த்தி, நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயத் தொழிலாளா்கள், சுயவேலை செய்பவா்களுக்கு மத்திய அரசு சாா்பில் ரூ.7500, மாநில அரசு சாா்பில் ரூ.5000 நிவாரணம் வழங்க வேண்டும். வங்கிகளில் பயிா்க் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். நுண்கடன், நிதி நிறுவனங்கள், வங்கிகளில் கட்டாய கடன் வசூலை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 23-இல் மாவட்டம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் போராட்டம் நடைபெறும் என இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டூா் ஒன்றியச் செயலா் க. மாரிமுத்து, ஒன்றியக்குழுத் தலைவா் மு. மணிமேகலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. கே.உலகநாதன் கலந்துகொண்டாா்.

இதில், சிபிஐ மாவட்ட துணைச் செயலா் ஆா்.ஞானமோகன், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் அ.பாஸ்கா், மாவட்ட பொருளாளா் ஜெ.ஜெயராமன், ஒன்றியத் தலைவா் மா.சிவசண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT