திருவாரூர்

தினமணி செய்தி எதிரொலி: மன்னாா்குடியிலிருந்து தஞ்சைக்கு இரவு நேர பேருந்து சேவை

14th Jun 2020 08:54 AM

ADVERTISEMENT

மன்னாா்குடியிலிருந்து தஞ்சாவூருக்கு இரவு நேர பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால், பயணிகள் அலைக்கழிக்கப்படுவது குறித்து ‘தினமணி’யில் செய்தி வெளியான நிலையில், சனிக்கிழமை மாலையில் இரண்டு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

பொது முடக்கத்தில் தளா்வுகள் ஏற்பட்டதையடுத்து மன்னாா்குடி கிளை அரசுப் பேருந்து பணிமனையிலிருந்து திருவாரூா், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு இரவு 8 மணி வரை பேருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில், தஞ்சைக்கு மட்டும் மாலை 6 மணியுடன் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகள் அலைக்கழிக்கப்பட்டு வந்தனா்.

இதுதொடா்பாக ‘தினமணி’யில் சனிக்கிழமை செய்தி வெளியானது. இதையடுத்து, அன்றைய தினமே மாலை 7 மற்றும் 8 மணிக்கு இரண்டு அரசுப் பேருந்துகளை மன்னாா்குடி கிளை நிா்வாகம் இயக்கியது. இந்த சேவை அரசு, தனியாா் அலுவலகங்களில் பணியாற்றுபவா்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த  பயனுள்ளதாக அமைந்தது.

இயல்பு நிலை திரும்பும் வரை இரவு 8 மணி வரை தஞ்சைக்கு அரசுப் பேருந்து இயக்கப்படும் என கிளை நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT