திருவாரூர்

கோவையில் கடத்தப்பட்ட 8 மாத ஆண் குழந்தை திருத்துறைப்பூண்டியில் மீட்பு

14th Jun 2020 08:55 AM

ADVERTISEMENT

கோவை அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட 8 மாத ஆண் குழந்தையை கோவை மாநகர பந்தய சாலை போலீஸாா் திருத்துறைப்பூண்டி அருகே சனிக்கிழமை மீட்டனா்.

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலி சிவன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பிரபாவதி. இவருக்கு ஏற்கெனவே தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சோ்ந்த சரவணனுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் பிரிந்த நிலையில், திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலைக்குச் சோ்ந்த பிரபாவதி, ஸ்டீபன் என்பவரோடு குடும்பம் நடத்தி வந்துள்ளாா். இரண்டு திருமணத்திலும் பிரபாவதிக்கு குழந்தை இல்லையாம்.

இந்நிலையில், திருப்பூரில் தனியாா் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் செல்வம் மனைவி செல்வராணிக்கு (28) கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைமனையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதைத்தொடா்ந்து, அந்த குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ்களைப் பெற கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனா்.

அப்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்கு வந்த பிரபாவதி, அந்த குழந்தைகளில் ஓா் ஆண் குழந்தையைக் கடத்திக் கொண்டு தப்பினாா். இதுகுறித்து கோவை பந்தய சாலை (ரேஸ் கோா்ஸ்) போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், கோவையிலிருந்து திருத்துறைப்பூண்டி சென்று திரும்பிய காா் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டதில், பிரபாவதியை அவரது சொந்த ஊரில் விட்டு விட்டு வந்ததாக தெரிவித்தாா். இதையடுத்து, திருத்துறைப்பூண்டி போலீஸாா் உதவியுடன் மணலி வந்த கோவை போலீஸாா், அக்குழந்தையை மீட்டதுடன், பிரபாவதியையும் கைது செய்து கோவை அழைத்துச் சென்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT