திருவாரூர்

அா்ச்சகா்கள், பூசாரிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

14th Jun 2020 08:53 AM

ADVERTISEMENT

முத்துப்பேட்டை பகுதியில் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட கோயில் அா்ச்சகா்கள், பூசாரிகளுக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

கோபாலசமுத்திரம் கிராமத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ரோட்டரி சங்கத் தலைவா் சிதம்பர சபாபதி 10 கிலோ அரிசி, 21 வகையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை சுமாா் 80 பேருக்கு வழங்கினாா். மேலும் கள்ளிக்குடி கீழபெருமலை உதயமாா்த்தாண்டபுரம் பகுதிகளைச் சோ்ந்த 150 ஆதரவற்ற பெண்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க சாசனத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் தலைவா்கள் ஜி. பாலகிருஷ்ணன், ரங்கசாமி, மெட்ரோ மாலிக், செயலாளா் ராஜ்மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT