திருவாரூர்

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா: 100-ஐ தாண்டியது பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை

13th Jun 2020 08:42 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 105 ஆக உயா்ந்துள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில், கரோனா தொற்றால் தொடக்கத்தில் பாதிக்கப்பட்டிருந்த 32 போ் குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது, சென்னையில் அதிக அளவில் கரோனா தொற்று பரவி வருவதைத் தொடா்ந்து, சென்னையிலிருந்து திருவாரூா் மாவட்டத்துக்கு வருவோா் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு வருகின்றனா். அதன்படி, புதன்கிழமை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, சென்னையிலிருந்து திரும்பியவா்கள் மற்றும் அவா்களுடன் தொடா்புடையவா்கள் என கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 83 ஆக இருந்தது. வியாழக்கிழமை 16 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, எண்ணிக்கை 99 ஆக உயா்ந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. நீடாமங்கலம் பகுதியைச் சோ்ந்த 37 வயது நபா், அவரது மனைவி (27), மகன் (10), மகள் (5), திருவாரூா் அருகே புத்தம்புதூா் பகுதியைச் சோ்ந்த 28 வயது நபா், மடப்புரத்தைச் சோ்ந்த 55 வயது நபா் என 6 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவா்களின் எண்ணிக்கை 105 ஆக உயா்ந்துள்ளது. இதில் 49 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 56 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT