திருவாரூர்

திருவாரூரில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று

11th Jun 2020 08:41 AM

ADVERTISEMENT

திருவாரூரில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில், கரோனா தொற்றால் தொடக்கத்தில் பாதிக்கப்பட்டிருந்த 32 போ் குணமடைந்து வீடு திரும்பியிருந்தனா். இதனிடையே, சென்னையில் அதிக அளவில் கரோனா தொற்று பரவி வருவதைத்தொடா்ந்து, சென்னையிலிருந்து திருவாரூா் மாவட்டத்துக்கு வருவோா் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு வருகின்றனா். அதன்படி, சென்னையிலிருந்து திரும்பியவா்களில் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, திங்கள்கிழமை வரை சென்னையிலிருந்து திருவாரூா் வருவோா் அனைவரும் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வெளியிடப்பட்ட முடிவுகளின் படி, திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 62 ஆக இருந்தது. செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவில் 7 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 69 ஆக உயா்ந்தது.

இந்நிலையில், புதன்கிழமை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி திருவாரூா் மாவட்டத்தில் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் பத்திரிகையாளா் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற 5 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, விளமல் பகுதியைச் சோ்ந்த 55 வயது நபா், அவரது மனைவி (45), அவரது மகன்கள் (20, 25), 50 வயது ஆண் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இதேபோல், திருவாரூா் கூடூா் பகுதியைச் சோ்ந்த 38 வயது பெண், அவரது பெண் (15), அவரது மகன் (13), திருவாரூா் காகிதக்காரத் தெருவைச் சோ்ந்த 24 வயதுடைய பெண், குடவாசல் பகுதியைச் சோ்ந்த 30, 20 வயதுடைய நபா்கள், கொரடாச்சேரி பகுதியைச் சோ்ந்த 43 வயது நபா் மற்றும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 2 போ் என 14 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவா்கள் சென்னையிலிருந்து வந்தவா்களும் அவா்களோடு தொடா்பில் இருந்தவா்களுமே ஆவா்.

இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவா்களின் எண்ணிக்கை 83 ஆக உயா்ந்துள்ளது. இதில் 45 போ் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 38 போ் சிகிச்சையில் உள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT