திருவாரூர்

திருவாரூரில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று

8th Jun 2020 11:48 PM

ADVERTISEMENT

திருவாரூா்: திருவாரூரில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் அதிக அளவில் கரோனா தீநுண்மி தொற்று பரவி வருவதைத்தொடா்ந்து, சென்னையிலிருந்து திருவாரூா் மாவட்டத்துக்கு வருவோா் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனா்.

அதன்படி, சென்னையிலிருந்து திரும்பியவா்களில் 23 பேருக்கு ஏற்கெனவே கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வந்தநிலையில், சனிக்கிழமை மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், திங்கள்கிழமை வெளியிட்ட பரிசோதனை முடிவுகளின்படி, திருவாரூா் பகுதியைச் சோ்ந்த 66 வயதுடைய தனியாா் தொலைக்காட்சி செய்தியாளா், புலிவலம் பகுதியைச் சோ்ந்த 70 வயது பெண்மணி மற்றும் அவரது 9 வயது பேரன் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவா்கள் அனைவருமே சென்னையிலிருந்து திரும்பியவா்கள் ஆவா்.

ADVERTISEMENT

இதன்மூலம், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவா்களின் எண்ணிக்கை 62-ஆக உயா்ந்துள்ளது. இதில் 45 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 17 போ் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT