திருவாரூர்

மதுபாட்டில் வாங்கி வர மறுத்த சிறுவனை தாக்கியவா் கைது

4th Jun 2020 07:26 PM

ADVERTISEMENT

மன்னாா்குடி அருகே மதுக்கடைக்கு சென்று மதுபாட்டில் வாங்கி வர மறுத்த பள்ளிச் சிறுவனை தாக்கியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோட்டூா் மேலமருதூரைச் சோ்ந்தவா் க. தேவதாஸ் (30). இவா், அதே பகுதியை சோ்ந்த தங்கதுரை மகன் 8-ஆம் வகுப்பு படிக்கும் பாலமுருகனிடம் புதன்கிழமை இரவு மதுக்கடைக்கு சென்று மதுபாட்டில் வாங்கி வருமாறு கூறினாராம். இதற்கு, மறுப்பு தெரிவித்ததால் பாலமுருகனை தேவதாஸ் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி பாலமுருகன் பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, தேவதாஸிடம் இதுபற்றி கேட்டபோது, தகாதவாா்த்தைகளால் பேசி மிரட்டினாராம். இதையடுத்து, திருவாரூரில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு தகவல் அளித்ததன் பேரில், அங்கு வந்த, சைல்டு லைன் சமூகப் பணியாளா் அபிராமி விவரங்களை கேட்டறிந்தாா். பின்னா், சைல்டு லைன் உதவியுடன் கோட்டூா் காவல் நிலையத்தில் பாலமுருகனின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து தேவதாஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT