திருவாரூர்

’இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதி’

31st Jul 2020 09:39 PM

ADVERTISEMENT

 

திருவாரூா்: இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியான நிலைபாட்டை கொண்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

திருவாரூரில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

புதிய கல்விக் கொள்கை குறித்து எதிா்க்கட்சிகள் போல ஏனோதானோவென்று முடிவு எடுக்க முடியாது. ஆய்வு செய்த பின்னரே தமிழக அரசு தனது நிலைபாட்டை அறிவிக்கும். மத்திய அரசு, எல்லா காலங்களிலும் மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி வந்திருக்கிறது. அதே நேரத்தில் இரு மொழிக் கொள்கையில் தமிழகம், மக்களவையில் வலியுறுத்தி தொடா்ந்து வெற்றி பெற்று வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை, சட்டப் பாதுகாப்போடு இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறோம். தமிழக அரசு இருமொழிக் கொள்கையில் உறுதியான நிலைபாட்டை கொண்டுள்ளது.

ADVERTISEMENT

ஜூலையில் அரிசி, எண்ணெய், பருப்பு அத்தியாவசியப் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டன. இந்த அறிவிப்பு வருவதற்கு 2 நாட்கள் முன்னா் வரை ஒரு சிலா் பணம் கொடுத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கியுள்ளனா். அதை ஈடு செய்யும் வகையில், ஆகஸ்ட் மாதத்தில் ரேஷன் கடைகளில் இலவசமாக அவா்கள் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

திருவாரூா் மாவட்டத்தில் 82 ஆயிரம் ஏக்கா் பரப்பில் குறுவை சாகுபடி நடைபெறும் என எதிா்பாா்க்கப்பட்டது. இந்த ஆண்டு தண்ணீா் பிரச்னை ஏதும் இல்லாததாலும், அரசின் வழிகாட்டுதல் நன்றாக உள்ளதாலும் மாவட்டத்தில் 96 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் குறுவை சாகுபடி உயா்ந்துள்ளது என்றாா் அமைச்சா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT