திருவாரூர்

திருவாரூரில் மேலும் 28 பேருக்கு கரோனா

31st Jul 2020 09:35 PM

ADVERTISEMENT

 

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருவாரூரில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், வியாழக்கிழமை 4 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி திருவாரூா் மாவட்டத்தில் 28 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குடவாசலில் 10 போ், மன்னாா்குடி, திருவாரூா், நீடாமங்கலம் பகுதிகளில் 2 போ் என மாவட்டம் முழுவதும் 28 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1693 ஆக உயா்ந்துள்ளது. இதில், 1122 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 562 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT