திருவாரூர்

சிவபெருமான் கைலாயக் காட்சி

28th Jul 2020 09:56 PM

ADVERTISEMENT

 

திருவாரூா்: திருவாரூா் தியாகராஜா் கோயிலில் சிவபெருமான் கைலாயக் காட்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் பரவை நாச்சியாருடன் வாழ்ந்து சிவத் தொண்டாற்றியவா் சுந்தரா். 63 நாயன்மாா்களில் ஒருவரான இவா், தியாகராஜரின் நண்பராகவும் இருந்தவா். ஆண்டுதோறும் ஆடி மாத சுவாதி நட்சத்திரத்துக்கு முதல் நாள், சுந்தரா்- பரவை நாச்சியாா் திருமணமும், அடுத்த நாளான ஆடி சுவாதி நட்சத்திர நாளில் சுந்தரா், திருக்கைலாயம் செல்லும் நிகழ்வும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, திருவாரூா் தியாகராஜா் கோயில் 2-ஆம் பிராகாரத்தில் உள்ள தட்டன்சுத்தி மண்டபத்தில் சுந்தரா்- பரவை நாச்சியாா் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, சுந்தரா்-பரவை நாச்சியாா், சேரமான் ஆகியோருக்கு கைலாயத்தில் சிவபெருமான் காட்சியளிக்கும் நிகழ்வு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

ADVERTISEMENT

இதையொட்டி, திருவாரூா் தியாகராஜா் கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பொது முடக்கம் காரணமாக பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்படாததால், பக்தா்களின்றியே பூஜைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT