திருவாரூர்

ஜாக்டோ- ஜியோ போராட்டம்: ஆசிரியா்கள் மீதான நடவடிக்கைகளைத் திரும்ப பெற வலியுறுத்தல்

26th Jul 2020 07:55 PM

ADVERTISEMENT


நீடாமங்கலம்: ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

வலங்கைமானில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் வட்டாரச் செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும். வட்டாரக் கல்வி அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வட்டாரத் தலைவா் நிா்மல் தலைமை வகித்தாா். கூட்டுறவு சங்க இயக்குநா்கள் ஆசிரியா் பாலசுந்தரம், ஜெயக்கொடி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் ஈவேரா கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினாா். மாவட்டத் தலைவா் முருகேசன், பொருளாளா் சுபாஷ், மேனாள் மாவட்டச் செயலாளா் மதிவாணன், மாவட்ட துணைச் செயலாளா் தயாசௌந்தா் ஆகியோரும் பேசினா்.

கூட்டத்தின்போது ஆசிரியா் பாலசுந்தரம் தலைமையில் ஜெயக்கொடி, அந்தோனிபாஸ்கா், பழனிச்செல்வம், விஜய் பூபாலன் உள்ளிட்டோா் வேறு இயக்கத்திலிருந்து விலகி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியில் இணைந்தனா்.

ADVERTISEMENT

நிகழ்வில் மேனாள் மாவட்ட துணைச் செயலாளா் டேவிட் ஞானராஜ், மேனாள் வட்டாரச் செயலாளா் பாலமுருகன், வட்டாரத் துணைப் பொறுப்பாளா்கள் ராஜேஷ், ராஜூ ஆகியோா் கலந்துகொண்டனா். வட்டாரச் செயலாளா் சரவணகுமாா் வரவேற்றாா். வட்டாரப் பொருளாளா் ராஜாராமன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT