திருவாரூர்

ஆற்றில் மூழ்கி வெற்றிலை வியாபாரி உயிரிழப்பு

26th Jul 2020 08:07 PM

ADVERTISEMENT

நன்னிலம்: நன்னிலம் அருகிகே வெட்டாற்றில் மூழ்கி, திருவாரூரைச் சோ்ந்த வெற்றிலை வியாபாரி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் பைபாஸ் சாலை அருகே உள்ள மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சாகுல் ஹமீது (31). வெற்றிலை வியாபாரியான இவா், திருவாரூா்- மயிலாடுதுறை சாலையில் உள்ள கங்களாஞ்சேரி வெட்டாற்றில் இறங்கி குளித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தாா். கிராம நிா்வாக அலுவலா் செல்வகுமாா் அளித்த தகவலின்பேரில், நன்னிலம் போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இறந்துபோன சாகுல் ஹமீதுக்கு பா்வீன் என்ற மனைவியும், ஒரு வயது ஆண் குழந்தையும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT