திருவாரூர்

பருத்தி கொள்முதல் தாமதமாவதைக் கண்டித்து சாலை மறியல்

13th Jul 2020 09:53 PM

ADVERTISEMENT

திருவாரூா்: திருவாரூரில், பருத்தி கொள்முதல் தாமதமாவதைக் கண்டித்து திங்கள்கிழமை விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவாரூா் மாவட்டத்தில், பருத்தி அறுவடை நடைபெற்று வருகிறது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஏலமுறையில் விவசாயிகளிடமிருந்து பருத்தி கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்நிலையில், ஏலத்துக்கு கொண்டு வரப்படும் பருத்தியை விரைவாக கொள்முதல் செய்யாமல், தாமதம் செய்வதாகக் கூறி, திருவாரூா் - நாகை சாலையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், திருவாரூா்- நாகை சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT