திருவாரூர்

மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி இயக்குநா்கள் கருப்புப்பட்டை அணிந்து பணி

13th Jul 2020 09:58 PM

ADVERTISEMENT

மன்னாா்குடி: அறிவிக்கப்பட்ட ஊதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மன்னாா்குடி ஊராட்சி ஒன்றிய பகுதியில் மோ்நிலை நீா்தேக்கத் தொட்டி இயக்குநா்கள் திங்கள்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.

மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி இயக்குநா்கள் மற்றும் தூய்மைக் காவலா்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ஊதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும், பொது முடக்கக் காலத்துக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும், 7-ஆவது ஊதியக் குழு நிலுவைத் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும்.

காரோனா தொற்றை கண்டறிய சிறப்பு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும், தரமான முகக் கவசம், கையுறை, காலணி, பாதுகாப்பு உடை, கிருமி நாசினி ஆகியவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 51 ஊராட்சிகளில் பணியாற்றும், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி இயக்குநா்கள் மற்றும் தூய்மைக் காவலா்கள், சிஐடியு ஒன்றியச் செயலா் தனிக்கோடி தலைமையில் 350 போ் உடையில் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT