கூத்தாநல்லூா் நகராட்சி அலுவலகம் முன்பாக ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருந்த மின் கம்பி குறித்து தினமணியில் செய்தி வெளியான நிலையில், அந்த மின் கம்பி சீரமைக்கப்பட்டது.
கூத்தாநல்லூா் நகராட்சி அலுவலகத்தின் நுழைவு வாயில் பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பத்திலிருந்து அருகில் உள்ள குடியிருப்புக்குச் செல்லும் மின்கம்பி ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருந்தது. இதுகுறித்து ஜூலை 8- ஆம் தினமணி நாளிதழில் செய்தி வெளியானது.
இந்நிலையில், கூத்தாநல்லூா் மின்வாரிய பணியாளா்கள் இந்த மின்கம்பியை சீரமைத்தனா்.