திருவாரூர்

கூத்தாநல்லூர்: வெண்ணாற்றில் மண்டிக்கிடக்கும் ஆகாயத் தாமரை

11th Jul 2020 10:51 AM

ADVERTISEMENT

கூத்தாநல்லூர் வெண்ணாற்றில், அல்லப்படாத வெங்காயத் தாமரை குவிந்து கிடக்கிறது. 

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் பாமணி, கோரையாறு, வெண்ணாறு என மூன்று கிளை ஆறாகப் பிரிகிறது. தொடர்ந்து, நீடாமங்கலம் ஒளிமதி வழியாக வந்து, வெண்ணவாசல் என்ற இடத்தில், வெண்ணாறு, பாண்டவையாறு எனவும், அத்திக்கடை, வாழாச்சேரி என்ற இடத்தில், வெண்ணாறு, வெள்ளியாறு எனவும் இரண்டாகப் பிரிகிறது. இதில், வெண்ணாறு லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூர், பண்டுதக்குடி, வடபாதிமங்கலம், புள்ளமங்கலம் வழியாக அரிச்சந்திரா நதியில் கலக்கிறது.

வெண்ணாற்றிலிருந்து முதன்மை வாய்க்கால்கள் பெரியதும், சிறியதுமாகப் பிரிந்து செல்கிறது. மேலும், பல கிளை வாய்க்கால்களுமாகப் பிரிந்து பாசனத்திற்குச் செல்லும் படியாக உள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டபடி, ஆறுகள் தூர்வாரப்பட்டு, ஆற்றின் ஓரங்களில் வளர்ந்து இருந்த தேவையற்ற மரங்களையும், செடிகளையும் அகற்றினர். மேலும். இரண்டு பக்க கரைகளும் உயர்த்தப்பட்டுள்ளது. பாசனத்திற்கு தண்ணீர் செல்லக் கூடிய சில கிளை வாய்க்கால்களில் மட்டும் சுத்தப்படுத்தப்பட்டு, வாய்க்காலில் மண்டிக் கிடந்த கழிவுகளை அகற்றப்பட்டன. 

தொடர்ந்து, திறந்து விடப்பட்ட தண்ணீரும் ஆற்றில் வந்து விட்டது. கூத்தாநல்லூர், பாய்க்காரப் பாலத்தின் கீழே, வெங்காயத் தாமரைகள் மண்டிக் கிடக்கிறது. ஆற்றில் தண்ணீர் விடப்பட்டு 10 நாட்களாகியும், வெங்காயத்தாமரை அகற்றப்படாததால், ஆற்றுத் தண்ணீர் மேற்கொண்டு செல்ல முடியவில்லை. ஆற்றுத் தண்ணீர் தேங்கி, தேங்கி, நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளன. இதனால், வெண்ணாற்றிலிருந்து ஆற்றுத் தண்ணீர் பாசனத்திற்கும் செல்ல முடியவில்லை. இதனால், ஆயிரக் கணக்கான விவசாய நிலங்களும் பாதிப்படையும் நிலையும் ஏற்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

உடனே, பொதுப்பணித் துறையினர் கவனித்து, வெண்ணாற்றில், மண்டிக் கிடக்கும் வெங்காயத் தாமரையை அகற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Koothanallur
ADVERTISEMENT
ADVERTISEMENT