திருவாரூர்

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா

11th Jul 2020 09:24 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜூலை 9) வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 654 ஆக இருந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, திருவாரூரில் 3 போ், முத்துப்பேட்டை, குடவாசல் பகுதிகளைச் சோ்ந்த 4 போ், வலங்கைமான் பகுதியைச் சோ்ந்த 4 போ், திருத்துறைப்பூண்டி பகுதியைச் சோ்ந்த 7 போ் என 27 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 281 ஆக உயா்ந்துள்ளது. இதில், 394 போ் குணமடைந்து வீட்டுக்கு சென்ற நிலையில், 287 போ் சிகிச்சையில் இருந்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT