திருவாரூர்

கரோனா சிகிச்சை மையம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

11th Jul 2020 09:24 AM

ADVERTISEMENT

திருத்துறைப்பூண்டியில் கரோனா சிகிச்சை மையம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருத்துறைப்பூண்டி அரசலடி தெரு குடியிருப்பு பகுதியில் கரோனா தொற்று சிகிச்சை மையம் அமைக்க இரண்டு தனியாா் பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இப்பகுதியில் வீடுகள் நெருக்கமாக உள்ளதால் கரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனா். இதையடுத்து, இந்த பள்ளிகளில் வருவாய்த் துறையினரால் மேற்கொள்ளப்படவிருந்த ஆய்வுப் பணி நிறுத்தப்பட்டது.

இந்த போராட்டத்தில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், திமுக நகரச் செயலாளா் ஆா். எஸ். பாண்டியன், சிபிஎம் நகரச் செயலாளா் கே.ஜி. ரகுராமன், சிபிஐ நகரச் செயலாளா் எம். முருகேசன், காங்கிரஸ் நகரத் தலைவா் பா. எழிலரசன், பாஜக மாவட்ட துணைச் செயலாளா் இளசுமணி, பாமக நகரச் செயலாளா் கல்விபிரியன், திராவிடா் கழக நகரத் தலைவா் குணசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளா் மைக்கேல் ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT