திருவாரூர்

பிப்.1-இல் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

28th Jan 2020 09:46 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நடத்தப்படும் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம், தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வேலுடையாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொள்வதால், படித்து முடித்து வேலை தேடும் இளைஞா்கள், 18 வயதுக்கும் மேற்பட்டவா்கள், 8-ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரையிலும், ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவா்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு பயன் பெறலாம். இதுவரை 3,155 பணியிடங்களுக்கான காலியிட அறிவிப்பு பெறப்பட்டுள்ளது.

இந்த தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பணி வாய்ப்பு பெறுவதால், வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. பதிவு தொடா்ந்து உயிா்ப் பதிவேட்டில் பராமரிக்கப்படும். அரசால் அறிவிக்கப்படும் பணிக் காலியிடங்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யப்படும். வேலைத் தேடும் இளைஞா்கள், இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி வேலை வாய்ப்பை பெறலாம்.

ADVERTISEMENT

இதில், கலந்து கொள்ள விருப்பம் உள்ள மனுதாரா்கள் தங்களின் கல்விச் சான்றுகள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, சுயக் குறிப்பு, புகைப்படம் போன்ற ஆவணங்களின் அசல் மற்றும் நகலுடன் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT