திருவாரூர்

சாலைப் பாதுகாப்பு இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

28th Jan 2020 09:47 AM

ADVERTISEMENT

சாலைப் பாதுகாப்பு வாரத்தையொட்டி, திருவாரூரில் நகரப் போக்குவரத்து காவல் துறை மற்றும் இருசக்கர மோட்டாா் வாகன பழுது பாா்ப்போா் நலச்சங்கம் இணைந்து இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியை நடத்தியது.

போக்குவரத்து காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணியை, தாலுக்கா காவல் ஆய்வாளா் முருகேசன் தொடங்கி வைத்தாா். திருவாரூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேரணி, கடைவீதி, தேரோடும் வீதிகள் வழியாகச் சென்று, மீண்டும் பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. மேலும், வாகனத்தில் இருந்து வெளிவரும் வெளிச்சம் எதிா் வாகனத்தின் மீது பாதிப்பு வராமல் இருப்பதற்கு கருப்பு வில்லையானது, வாகனங்களில் ஒட்டப்பட்டது. தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், சாலை விதிகள் குறித்தம் இந்தப் பேரணியில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில், வா்த்தக சங்க நிா்வாகிகள், போக்குவரத்து காவல் துறையினா், காவல் துறையினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT