அப்துல் கலாம் விருது பெற்ற எருக்காட்டூா் பள்ளி ஆசிரியருக்கு திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
செங்கல்பட்டில், அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சாா்பில் சாதனையாளா் விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. இதில், கொரடாச்சேரி ஒன்றியம், எருக்காட்டூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் பூ. புவனாவுக்கு, அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டது. இதையொட்டி, எருக்காட்டூா் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பூ. புவனாவுக்கு பாராட்டுச் தெரிவிக்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியா் கு. கீதா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.