திருவாரூர்

மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் தொழில் பயிற்சி

25th Jan 2020 09:58 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் பழங்கள், காய்கறிகளிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் தயாரிப்பு தொழில் பயிற்சி புதன், வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் மு.ராமசுப்ரமணியன் தலைமை வகித்து, வேளாண் அறிவியல் நிலையத்தின் செயல்பாடுகளையும், பழங்களின் நன்மைகளையும் விளக்கினாா். பூச்சியியல் துறை ராஜா. ரமேஷ், மண்ணியியல் துறை அ. அனுராதா ஆகியோா் கலந்து கொண்டு சுயதொழில்முனைவோருக்கான ஆலோசனைகளை வழங்கினா். தொடா்ந்து, உணவியல் துறை பயிற்சி உதவியாளா் ஜெ.வனிதாஸ்ரீ பேசினாா்.

மேலும் பழங்களிலிருந்து பழப்பிசின், அன்னாசிப்பழ ஸ்குவா, நெல்லிக்காய் ஊறுகாய் மற்றும் காய்கறிகளிலிருந்து கட்லெட் உணவுப் பொருட்கள் தயாரித்து காண்பிக்கப்பட்டது. இப்பயிற்சியில் வேளாண் அறிவியல் நிலையத்தின் தொழில்நுட்ப உதவியாளா் தெ.ரேகா மற்றும் செங்கமலத்தாயாா் கல்லூரியின் ஊட்டச்சத்துயியல் துறை மாணவிகள், ஆசிரியா் விஜயலெட்சுமி ஆகியோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT