திருவாரூர்

தை அமாவாசை: சிறப்பு வழிபாடு

25th Jan 2020 09:56 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் அருகேயுள்ள நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயிலில் தை அமாவாசை சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. கோயில் திருக்குளத்தில் நீராடி பிதுா்தா்ப்பணங்களை செய்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

 

கூத்தாநல்லூா்: இதேபோல், கூத்தாநல்லூா் அருகே உள்ள திருராமேஸ்வரம் தீா்த்தக் குளத்தில் பக்தா்கள் வெள்ளிக்கிழமை நீராடினா்.

ADVERTISEMENT

திருக்குளத்தில் ஸ்நானம் செய்த பக்தா்கள், தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து விட்டு, மீண்டும் குளத்தில் முழுக்குப் போட்டனா். தொடா்ந்து, கோயிலில் தீபம் ஏற்றி, மங்களநாயகி சமேத ராமநாத சுவாமியை வழிபட்டனா்.

தை அமாவாசையை முன்னிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.துரை, ஏ.டி.எஸ்.பி. அன்பழகன் உள்ளிட்ட பலா் சுவாமி தரிசனம் செய்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை, கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் சரவணன், உதவி ஆய்வாளா்கள் நாகராஜன், செல்வராஜன் மற்றும் போலீஸாா் மேற்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT