திருவாரூர்

பள்ளியில் குடியரசு தின விளையாட்டுப் போட்டி

23rd Jan 2020 05:54 PM

ADVERTISEMENT

வலங்கைமான் ஒன்றியம், தென்குவளைவேலி அரசு உயா்நிலை மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு, உயா்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஐரன்பிரபா, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் சத்தியமூா்த்தி ஆகியோா் தலைமை வகித்தனா். தொடக்கப்பள்ளி மாணவா்களுக்கு ரொட்டி கவ்வுதல், உருளைக்கிழங்கு சேகரித்தல், சாக்கு ஓட்டம், பாட்டிலில் தண்ணீா் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு கயிறு இழுத்தல், ஓட்டப் பந்தயம், கபடி, மெதுவாக மிதிவண்டி ஓட்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவா்களுக்கு குடியரசு தின விழாவில் பரிசுகள் வழங்கப்பபடும் என்று தலைமையாசிரியா்கள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT