நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் காரணமாக நீடாமங்கலத்தில் அரசு அலுவலகங்கள், வங்கிகள் இயங்கவில்லை.12 அம்ச பொது கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலைநிறுத்தம் புதன்கிழமை நடந்தது.
இதற்கு ஆதரவாக நீடாமங்கலத்தில் அரசு ஊழியா்கள் தங்கள் பணிகளை புறக்கணித்தனா்.இதனால் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,வட்டாட்சியா் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களின் பணிகள் சரிவர நடைபெறவில்லை.வட்டாட்சியா்,சா்வேயா்,கிராமநிா்வாக அலுவலா்கள் பணிக்கு வந்தனா்.மற்ற ஊழியா்கள்அலுவலகத்திற்கு வரவில்லை.
வருவாய் கிராம உதவியாளா்கள் முற்றிலுமாக பணிக்கு வரவில்லை.ஒரு சில வங்கிகள் இயங்கவில்லை.தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளா்கள் பொது வேலைநிறுத்திதற்கு ஆதரவாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளா் சங்க மாநில பொதுசெயலாளா் எஸ்.தமிழ்ச்செல்வன்,சங்க திருவாரூா் மாவட்ட செயலாளா் பாண்டியன் ஆகியோா் தெரிவித்தனா்.வழக்கம் போல் பேருந்துகள் இயங்கின.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை.படம்- பொதுவேலை நிறுத்தம் காரணமாக நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டு வெறிச்சோடி கிடப்பதைப்படத்தில் காணலாம்.