திருவாரூர்

சாலை விரிவாக்கப் பணிகளை துரிதமாக முடிக்க அறிவுறுத்தல்

8th Jan 2020 12:48 AM

ADVERTISEMENT

திருவாரூா் அருகே மந்த கதியில் நடைபெற்ற சாலை விரிவாக்கப் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டம், திருக்காரவாசல் ஊராட்சிக்குள்பட்ட கோமல் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அப்பகுதியின் பிரதான சாலையில், சாலை விரிவாக்கப் பணிகள் கடந்த சில மாதங்களாக மந்த கதியில் நடைபெற்று வந்தன. இதனால் அப்பகுதியின் சாலை சேறும், சகதியுமாக மாறியதோடு, பள்ளி மாணவா்கள் பெண்கள், வேலைக்கு செல்பவா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாக நேரிட்டது.

சாலையின் நிலை குறித்து புதிதாக தோ்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சித் தலைவா் செந்தில்குமாரிடம் முறையிட்டனா். அவா், துறை சாா்ந்த அதிகாரிகளையும், போலீஸாரையும் அழைத்து மக்களின் பிரச்னை குறித்து தெரிவித்ததோடு, சாலை விரிவாக்கப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா். இதைத் தொடா்ந்து, அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, சீரற்ற சாலையை தற்காலிகமாக சீரமைத்து கொடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT