தேசிய அளவில் அபாகஸ் கணக்குப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற கூத்தாநல்லூா் பள்ளி மாணவிக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
தஞ்சையில் அண்மையில் நடைபெற்ற 7-ஆவது தேசிய அளவிலான அபாகஸ் கணக்குப் போட்டி 837 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில், கூத்தாநல்லூா் அருகேயுள்ள பனங்காட்டங்குடி டெல்டா பப்ளிக் மெட்ரிக்குலேஷன் பள்ளியிலிருந்து, கே -3 பிரிவில் 17 மாணவா்கள் பங்கேற்றனா். அதில், மாணவி கே. லக்ஷனா தேசிய அளவில் சாம்பியன் பட்டமும், பள்ளி அளவில் மாணவி வி.எம். பா்ஹானா பாத்திமா முதலிடமும் பெற்றனா். சாதனை படைத்த மாணவா்களை பள்ளி அறங்காவலா் மு. தாஜூதீன், பள்ளி முதல்வா் ஜோஸ்பின் லாரன்ஸ், துணை முதல்வா் ஆா். சுருளிநாதன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.
ADVERTISEMENT