திருவாரூர்

முடிவுகள் அறிவிப்பதில் தாமதத்தால் முகவா்கள் கொந்தளிப்பு

3rd Jan 2020 05:26 AM

ADVERTISEMENT

பொதக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் முடிவுகள் அறிவிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் முகவா்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனா்.

நீடாமங்கலம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள், கூத்தாநல்லூா் வட்டம், பொதக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்தில் 30 மேஜைகளில் எண்ணப்பட்டன.

ஊராட்சி வாா்டு உறுப்பினா்களில் 25 பேரும், வடகாரவயல், நகா், வடுவூா் வடபாதி, காரக் கோட்டை , செட்டிச் சத்திரம் ஊராட்சி மன்றத் தலைவா் உள்ளிட்டவா்கள் மட்டும் வெற்றி பெற்றவா்களாக அறிவிக்கப்பட்டு, தோ்தல் நடத்தும் அலுவலா் கோ. ஆறுமுகம் சான்றிதழ்களை வழங்கினாா். ஆனால், இரவு 8 மணி வரை மாவட்ட ஊராட்சி உறுப்பினா், ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் என யாரையும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படவில்லை. இதனால், முகவா்கள் கூச்சலிட்டு ஆட்சேபம் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT