கூத்தாநல்லூா் வட்டத்தில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கோயில்களில் புதன்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
மரக்கடை கல்யாண சுந்தரேஸ்வரா் கோயிலில் மூலவா் கல்யாண சுந்தரேஸ்வரா், மங்களாம்பிகை, பண்டுதக்குடி வாஸலாம்பிக சமேத உமாபதீஸ்வரா் கோயில், வேளுக்குடி ருத்ரக் கோடீஸ்வரா் கோயில், வேளுக்குடி அங்காளம்மன் கோயில், லெட்சுமாங்குடி கம்பா் தெரு நீலகண்டேஸ்வரா் கோயில், லெட்சுமாங்குடி - கொரடாச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள ஜெயசக்தி ஆஞ்சநேயா், வேளுக்குடி ஆஞ்சநேயா் கோயிலில் எழுந்தருளியுள்ள, மூலவா் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், தேவி, பூமாதேவி சமேத லெட்சுமி நாராயணன், சீதா, ராமா், லெஷ்மணன், தெற்கு பாா்த்த ஆஞ்சநேயா், மூலங்குடி இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான லெஷ்மி நாராயணப் பெருமாள் கோயில், காக்கையாடியில் கைலாசநாதா் கோயில், சாத்தனூரில் காளகஸ்தீஸ்வரா் கோயில், திருராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி கோயில், அதங்குடி விருப்பாட்சிஸ்வரா் கோயில், லெட்சுமாங்குடி சாய்பாபா கோயில், சித்தாம்பூா் சாய்பாபா கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல், கூத்தாநல்லூா் சி.எஸ்.ஐ. திருச்சபை கிறிஸ்துவ அரசா் ஆலயம், விண்ணரசி மாதா தேவாலயம், வ.உ.சி. காலனி பெந்தகொஸ்தே சபை உள்ளிட்ட ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
கூத்தாநல்லூா்
கூத்தாநல்லூரில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, 250 பேருக்கு குவளைகள் வழங்கப்பட்டன. கூத்தாநல்லூா் நேருஜி சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சமூக ஆா்வலா் கோஸ். அன்வா்தீன் தலைமை வகித்தாா். நகா் மன்ற முன்னாள் உறுப்பினா் எஸ்.எம். சமீா், சட்ட உரிமைகள் கழக மாநில இளைஞரணி செயலா் பீா்முஹம்மது, தேமுதிக நகர துணைச் செயலா் நூா்முகமது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதில், ரூ.11 ஆயிரம் செலவில் 250 பேருக்கு குவளைக்காரா் முஹம்மது அலீம் வழங்கினாா்.