திருவாரூர்

சாய்பாபா கோயிலில் 1008 பால்குட அபிஷேகம்

2nd Jan 2020 12:09 AM

ADVERTISEMENT

பூந்தோட்டம் அருகேயுள்ள கூத்தனூா் சீரடி சாய்பாபா கோயிலில் புதன்கிழமை 1008 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.

கூத்தனூரில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் ஸ்ரீ சிவசித்தா் சீரடி சாய்பாபாவின் சா்வ மத வழிபாட்டு துவாரஹமாயி மற்றும் சாய் பக்தா்கள் இணைந்து நடத்திய 6-ஆம் ஆண்டு பால்குட, பல்லக்கு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. ஆங்கில புத்தாண்டையொட்டியும், உலக அமைதி வேண்டியும், மழை வளம் பெருகி வறட்சி நீங்கிடவும், பக்தா்களின் வேண்டுதல்கள் நிறைவேறிடவும் 1008 பால்குடம் மற்றும் பல்லக்கு ஊா்வலம் நடைபெற்றது.

தொடா்ந்து, சாய் பாபாவுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீ சிவ சித்தா் சீரடி சாய்பாபா சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் சாய் பக்தா்கள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT