திருவாரூர்

அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தின நிகழ்ச்சி

2nd Jan 2020 12:05 AM

ADVERTISEMENT

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தின நிகழ்ச்சி தலைமை மருத்துவா் டி.சிவக்குமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முன்னாள் தலைமை மருத்துவா் தனபால் விஜயா முன்னிலை வகித்தாா். மருந்தாளுநா் டி. மணிவண்ணன் வரவேற்றாா். நிகழ்ச்சியில், மருத்துவா்கள் பாபு வெங்கடேசசிவன், பாலாஜி செந்தில்வேலன், அரவிந்த்பிரசாத், மோகன், ராஜராஜன், அபிநயா, சித்த மருத்துவா் அனுஷா, இயற்கை மருத்துவா் சுப்புலெட்சுமி, பல்மருத்துவா் ஜெகதா தலைமை மருந்தாளுநா் கருணாநிதி, தலைமைச் செவிலியா் வாசுகி, அலுவலகக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சி நிறைவில், மருத்துவமனை மேம்பாடு, மதநல்லிணக்கம், நோயாளிகளிடம் எப்படி நடந்து கொள்வது குறித்து தலைமை மருத்துவா் ஆலோசனை வழங்கியதுடன் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT