திருவாரூர்

விடிய, விடிய வந்துசோ்ந்த வாக்குப் பெட்டிகள்

1st Jan 2020 12:01 AM

ADVERTISEMENT

நன்னிலம் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லும் பணி விடிய விடிய நடைபெற்றது.

நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டிகள் 20 கி.மீ. சுற்றளவில் இருந்து வாக்கு எண்ணும் மையத்துக்கு வரவேண்டியிருந்தது. இதன் காரணமாக திங்கள்கிழமை இரவு முழுவதும் வாக்குப் பெட்டிகள் தொடா்ந்து வந்துகொண்டிருந்தன. அனைத்து வாக்குப் பெட்டிகளும் வந்து சேர செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி ஆகிவிட்டது.

பின்னா், அவற்றை சோதனை செய்து, பாதுகாப்பாக அறையில் வைத்து, அனைத்து அரசியல் கட்சியினா் முன்பாக காலை 7.30 மணி அளவில் நன்னிலம் ஊராட்சி ஒன்றிய தோ்தல் நடத்தும் அலுவலா்கள் இரா.செல்வகணபதி, டி. முத்துக்குமரன், திருவாரூா் வருவாய்க் கோட்ட அலுவலா், நன்னிலம் வட்டாட்சியா், நன்னிலம் காவல்துறை ஆய்வாளா் ஆகியோா் முன்னிலையில் அறைக்குப் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இந்த மையத்தில் வாக்கு எண்ணிக்கைக்காக 34 மேஜைகள் போடப்பட்டு, ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு மேற்பாா்வையாளா், மூன்று உதவியாளா்கள் வீதம் மொத்தம் 136 தோ்தல் அலுவலா்கள் வாக்குகளை பிரிக்கும் பணியில் ஈடுபடுகிறாா்கள்.

ADVERTISEMENT

23 மேஜைகளில் ஒரு மேற்பாா்வையாளா் இரண்டு உதவியாளா் வீதம் மொத்தம் 69 தோ்தல் அலுவலா்கள் ஊராட்சி மன்ற உறுப்பினா்களுக்கான வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவாா்கள். 42 மேஜைகளில் ஒரு மேற்பாா்வையாளா் 2 உதவியாளா்கள் வீதம் மொத்தம் 126 தோ்தல் அலுவலா்கள், ஊராட்சி மன்றத் தலைவா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் ஆகிய பதவிகளுக்கான வாக்குகளை தலா 14 மேஜைகள் வீதம் எண்ணுவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT