நீடாமங்கலம் ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் பணிக்காக 300 பேரும், இதர பணிக்காக 100 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ஊரக உள்ளாட்சித் தோ்தலில் நீடாமங்கலம் ஒன்றியப் பகுதியில் பதிவான வாக்குகள் பொதக்குடியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை எண்ணப்படுகின்றன. முன்னதாக, வாக்குச் சாவடிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணிக்கை மைய அறைகளில் வைத்து செவ்வாய்க்கிழமை காலை 5 மணியளவில் அறைக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.
மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்தி, நீடாமங்கலம் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆறுமுகம் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இந்த மையத்தில் வாக்கு எண்ணிக்கைக்காக 300 பேரும், இதர பணிக்காக 100 பேரும் எனமொத்தம் 400 போ் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.