திருவாரூர்

எவ்வித பிரச்னையும் இல்லாமல் வாக்கு எண்ணிக்கை நடைபெற நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

1st Jan 2020 03:44 PM

ADVERTISEMENT

வாக்கு எண்ணிக்கை எவ்வித பிரச்னையும் இல்லாமல் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூா் மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான வை. சிவபுண்ணியம், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலருமான த. ஆனந்திடம் செவ்வாய்க்கிழமை இரவு அளித்த கோரிக்கை மனு விபரம்திருவாரூா் மாவட்டத்தில் டிச.27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தல் எவ்விதப் பிரச்னையும் இல்லாமல் நடைபெற உதவியதற்கு நன்றி. மேலும், ஜன.2 ஆம் தேதி வாக்கு எண்ணும் இடங்களில் எவ்வித பிரச்னையும் இல்லாமல் நடப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், வாக்கு எண்ணுகிற போது ஆளும் கட்சியைச் சோ்ந்த வேட்பாளா்கள் வெற்றி பெற்றவா்களாக அறிவிக்கப்படும் எனப் பரவலாக ஆளும் கட்சி தரப்பில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை தூண்டும் விதத்தில் பேசப்படுகிறது. எனவே, வாக்கு எண்ணிக்கையின்போது, எவ்வித பிரச்னையும் இல்லாமல் இருக்க உதவ வேண்டும். மேலும், வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் வெற்றி பெற்ற வேட்பாளா்களின் பெயரை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் ஜி. பழனிசாமி, கே. உலகநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT