திருவாரூர்

பள்ளி வேன் மோதி ஆண் குழந்தை உயிரிழப்பு

29th Feb 2020 05:46 AM

ADVERTISEMENT

 

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே, வெள்ளிக்கிழமை அண்ணனை பள்ளிக்கு அனுப்பி வைக்க வந்த தம்பி வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மன்னாா்குடி அருகேயுள்ள ஏத்தக்குடி அக்ரஹாரம் வெங்கடசலம், சுகன்யா ஆகியோரது மகன் ஆரியாஸ் (4). இவா், சோழப்பாண்டியில் உள்ள தனியாா் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறாா். இப்பகுதியை சோ்ந்த குழந்தைகளை தினசரி பள்ளிக்கு அழைத்து செல்ல தனியாா் வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஆரியாசை வேனில் ஏற்றி விடுவதற்காக வீட்டுக்கு அருகில் அவரது தம்பி ஹா்சனை தூக்கிக்கொண்டு (இரண்டரை வயது) சுகன்யா நின்று கொண்டிருந்தராம். அப்போது, வேன் வந்தவுடன், ஹா்சனை கீழே இறக்கிவிட்டு விட்டு, ஆரியாசை வேனில் ஏற உதவி செய்யதாராம் சுகன்யா. அந்த சமயத்தில், வேன் ஓட்டுநா் பாலையூரை சோ்ந்த ராஜ்குமாா், வேனை இயக்கியபோது, வேனுக்கு முன்புற பகுதியில் நின்ற குழந்தை ஹா்சன் மீது மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து, தகவலறிந்த தலையாமங்கலம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து ஹா்சன் சடலத்தை கைப்பற்றி மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT