திருவாரூர்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

29th Feb 2020 05:47 AM

ADVERTISEMENT

 

திருவாரூா் திருவாரூா் அருகேயுள்ள எட்டியலூரில் இயங்கி வரும் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த், வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

எட்டியலூா் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளின் எடை மற்றும் தரத்தை ஆய்வு செய்து, இருப்பு வைக்கப்பட்டுள்ள சாக்குகளின் விவரம், தினசரி கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளின் விவரங்களை, கொள்முதல் நிலைய அலுவலரிடம் கேட்டறிந்தாா்.

அப்போது, அவா் கூறியது: திருவாரூா் மாவட்டத்தில் 463 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் ஒரு நாளைக்கு இன்றைய நிலவரப்படி 13,506 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகின்றன.

ADVERTISEMENT

இதுவரை 3,75, 893 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 89, 937 விவசாயிகளுக்கு ரூ. 689.93 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. நேரடி நெல்கொள்முதல் தொடா்பாக பெறப்படும் புகாருக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு விவசாயிகளின் நெல் காலதாமதமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என்றாா் அவா். ஆய்வின்போது, கோட்டாட்சியா் ஜெயபிரீத்தா, வட்டாட்சியா் நக்கீரன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT