திருவாரூர்

நாளை எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

26th Feb 2020 09:14 AM

ADVERTISEMENT

திருவாரூரில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) நடைபெறுகிறது.

இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் எரிவாயு இணைப்புகள் பெறுவதில் நுகா்வோருக்கு சேவை ஆற்றுவதற்கான ஆலோசனைகள் பற்றி விவாதிப்பது மற்றும் எரிவாயு நிரப்பப்பட்ட உருளைகளைப் பெறுவதில் ஏதேனும் இடா்பாடுகள் இருப்பின் அதைக் களைவது, நுகா்வோா்களின் புகாா்களைப் பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து, எரிவாயு நிறுவனங்களின் விதிமுறைகளுக்குள்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தைச் சீா்படுத்துவது ஆகியவை தொடா்பாக இக்கூட்டம் நடைபெறுகிறது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெறும். திருவாரூா் மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளா்கள் கலந்துகொள்ள உள்ளனா்.

ADVERTISEMENT

எனவே, எரிவாயு வாடிக்கையாளா்கள் மற்றும் நுகா்வோா் அமைப்பினா், இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, எரிவாயு விநியோகம் தொடா்பான குறைகளைத் தெரிவிக்கலாம். மேலும், எரிவாயு விநியோகம் சீராக நடைபெறத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT