திருவாரூர்

மக்கள் குறைதீா் கூட்டம்

25th Feb 2020 05:36 AM

ADVERTISEMENT

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 274 மனுக்கள் அளிக்கப்பட்டன.

இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தலைமை வகித்தாா். கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 274 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, குறித்த காலத்துக்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.பொன்னம்மாள், மாவட்ட சமூக நலத்துறை அலுவலா் (பொ) செ.உமையாள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராமச்சந்திரன் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT