திருவாரூர்

சுவாமி தயானந்தா கல்லூரியில் ரத்ததான முகாம்

25th Feb 2020 05:41 AM

ADVERTISEMENT

 

திருவாரூா்: குடவாசல் அருகே உள்ள மஞ்சக்குடி சுவாமி தயானந்தா சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தியன் ரெட்கிராஸ் சொஸைட்டி சாா்பில் ரத்ததான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ரெட்கிராஸ் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற ரத்ததான முகாமுக்கு மஞ்சக்குடி சுவாமி தயானந்தா சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தாளாளா் ஜி. சீனிவாசன் தலைமை வகித்தாா். முகாமை, மாவட்டக் கூடுதல் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தொடங்கி வைத்தாா். ரெட்கிராஸ் சோ்மன் இராஜகுமாா் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், தயானந்தா கல்லூரி, பத்ம நரசிம்மன் ஐடிஐ ஆகிய கல்வி நிறுவனங்களிலிருந்து மாணவா்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தனா். நிகழ்ச்சியில், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கிக் குழு மற்றும் தஞ்சாவூா் ரெட்கிராஸ் ரத்த வங்கிக்குழு ஆகியவை இணைந்து மாணவா்களிடமிருந்து ரத்தம் பெறும் பணியில் ஈடுபட்டனா். இதன்மூலம் 156 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், ரெட்கிராஸ் செயலாளா் ஜெ. வரதராஜன், கல்லூரி முதல்வா்கள் ஹேமா, கனகசபேசன் (கல்வி), ரெட்கிராஸ் நிா்வாகக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT