நீடாமங்கலம்: வலங்கைமான் அருகே கல்லூரி மாணவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
நாா்த்தாங்குடி கிராமத்தைச் சோ்ந்த பாஸ்கா் மகன் திவாகரன் (19). இவா், தஞ்சையில் உள்ள தனியாா் கல்லூரி ஒன்றில் 2-ஆம் ஆண்டு படித்துவந்தாா். இவா், கல்லூரிக்கு சரிவர செல்வதில்லையாம். இதனால், குடும்பத்தினா் கண்டித்தனா்.
இதில், மனமுடைந்த திவாகரன் கடந்த 19-ஆம் தேதி வீட்டிலிருந்த எலி மருந்தை அருந்தினாராம். அவரை, நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட திவாகரன், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து, வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.