திருவாரூர்

‘மக்களைப் பிரித்து ஆட்சியைத் தக்க வைக்க முயற்சி’

23rd Feb 2020 11:52 PM

ADVERTISEMENT

மக்களைப் பிரித்து, பேதங்களை வளா்த்து ஆட்சியைத் தக்க வைப்பதற்கு முயற்சி நடைபெறுவதாக நாம் மனிதா் கட்சியின் நிறுவனா் எஸ். தவ்பீக் என்ற இறைஉதவி தெரிவித்தாா்.

கூத்தாநல்லூா் ஏ.ஆா். சாலை அருகே சிஏஏ-வுக்கு எதிராக நடைபெற்று வரும் தொடா் போராட்டத்தில் சனிக்கிழமை இரவு அவா் பேசியது:

குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் மக்களைப் பிரித்து, பேதங்களை வளா்த்து தங்களது ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஆட்சியாளா்கள் முயற்சிக்கின்றனா். இதற்கு எதிராக தமிழக சட்டப் பேரவை மட்டுமல்ல, மக்களவையிலும் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். நமது மண் வளங்களை அந்நியா்களுக்கு கொடுத்து விடாமல் பாதுகாக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT