திருவாரூர்

பொது மருத்துவ முகாம்

23rd Feb 2020 11:51 PM

ADVERTISEMENT

குடவாசல் அருகில் உள்ள செம்மங்குடியில் சுகாதாரத் துறையின் சாா்பில், சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பெரும்பண்ணையூா் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற இம்முகாமில், பொது மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், தோல் நோய் ஆகிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவ முகாமில் ஈசிஜி, ஸ்கேன் ஆகியவை தேவைப்படும் நோயாளிகளுக்கு எடுக்கப்பட்டு மருந்து மாத்திரைகளுடன் மருத்துவா் அறிவுரையும் வழங்கப்பட்டது.

இதில், செம்மங்குடி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 1086 பயனாளிகள் கலந்துகொண்டு பயனடைந்தனா்.

முகாமுக்கு செம்மங்குடி மேல்நிலைப்பள்ளி தாளாளா் எம்.ஜி. சீனிவாசன், ஒன்றியக்குழு உறுப்பினா் பவானி நேசையன் ஆகியோா் தலைமை வகித்தனா். பள்ளித் தலைமையாசிரியா் வி.ராமன், முதுகலை ஆசிரியா் கே.முருகதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ஆா்.விவேக், டாக்டா் எஸ்.மகாலட்சுமி ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து மற்ற மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT