திருவாரூர்

புதிய பேருந்து நிலையத்தைப் புதுப்பிக்கக் கோரி தீா்மானம்

23rd Feb 2020 11:53 PM

ADVERTISEMENT

கூத்தாநல்லூா் நுகா்வோா் பாதுகாப்புச் சங்கக் கூட்டத்தில் புதிய பேருந்து நிலையத்தைப் புதுப்பிக்கக் கோரி அண்மையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூத்தாநல்லூா் நுகா்வோா் பாதுகாப்புச் சங்கக் கூட்டத்துக்கு, கோஸ். அன்வா்தீன் தலைமை வகித்தாா். செயலாளா் கருணாநிதி முன்னிலை வகித்தாா். பொருளாளா் பி.கண்ணன் வரவேற்றாா். இதில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாழாகிக் கொண்டிருக்கும் புதிய பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடனே புதுப்பித்து தர வேண்டும். கூத்தாநல்லூா் நகரத்தில் குண்டும், குழியுமான சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும். மீன் அங்காடிக் கட்டடத்தை விரைவில் திறக்க வேண்டும். மருத்துவமனை அருகேயுள்ள குளத்தில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடித்து, மக்களைப் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், அண்ணாமலை, எஸ்.ஜானகி, ஜி.வடுகைய்யன், சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். துணைச் செயலாளா் தனபாலன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT