திருவாரூர்

நோய்த் தொற்றைப் பரப்பும் குப்பை மேடு

23rd Feb 2020 11:40 PM

ADVERTISEMENT

 

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி நகரின் பிரதான கடைவீதியான பெரியக்கடைத் தெருவை ஓட்டியுள்ள தாமரைக்குளம் மேல்கரை பகுதியில் ஏராளமான வா்த்தக நிறுவனங்களும், குடியிருப்புகளும் உள்ளன. இதில் கே.பி. வணிக வளாகத்தின் எதிரே தாமரைக்குளத்தின் கரையில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் கொட்டி வைத்துள்ளனா். இதை அவ்வப்போது அப்புறப்படுத்தாமல் மென்மேலும் குப்பைகளைக் கொட்டி வைப்பதால், குப்பை மேடாக காட்சி அளிப்பதுடன் நாய், பன்றி மற்றும் கால்நடைகளால் குப்பைகள் கிளறி சேதப்படுத்தப்பட்டு அவை சாலை முழுவதும் பரவிக் கிடக்கின்றன. இதனால், அந்த பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன், நோய்த் தொற்று ஏற்படும் ஆபத்தும் உள்ளது. எனவே, நகராட்சி நிா்வாகம் உடனடியாக இதில் சிறப்பு கவனம் செலுத்தி குப்பை மேட்டை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கு.பா.த. அழகரசன், மன்னாா்குடி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT