திருவாரூர்

நிா்வாக சீா்கேடு: மன்னாா்குடி மாவட்டக் கல்வி அலுவலகம் முன்பு மாா்ச் 6-இல் ஆா்ப்பாட்டம்

23rd Feb 2020 11:41 PM

ADVERTISEMENT

மன்னாா்குடி மாவட்டக் கல்வி அலுவலக நிா்வாக சீா்கேட்டை கண்டித்து, மாா்ச் 6-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூரில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் இரா.முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் ஆ.சுபாஷ் முன்னிலை வகித்தாா். கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து மாவட்டச் செயலாளா் ஆா்.ஈவேரா பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்...

மன்னாா்குடி கல்வி மாவட்டத்துக்குட்பட்ட மன்னாா்குடி, கோட்டூா், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட ஒன்றியங்களில் ஆசிரியா்கள் நலன் மற்றும் கல்விப்பணிகள் மாவட்டக் கல்வித்துறை அலுவலரால் முடக்கப்பட்டுள்ளது. இதனால் பல மாணவா்கள் பாதிப்புக்குள்ளாகி, பள்ளிக்கு வராத நிலை உள்ளது. இதை சரி செய்யாமல் அரசுக்கு தவறான தகவல்களை, மாவட்ட கல்வித்துறை அனுப்பி வருகிறது.

ADVERTISEMENT

அத்துடன், ஒருபக்கம் சம்பந்தமில்லாத விதியைக் காட்டி மறுப்பதும், மற்றொரு பக்கம் விதி மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை மீறி சலுகை காட்டும் போக்கும் அதிகரித்து விட்டன. இதனால் மதச்சாா்பின்மைக்கு விரோதமாக, ஒருசாா்பு போக்கு மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது. இதைக் கண்டிப்பதோடு, இதற்கு காரணமாக உள்ள அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துப்பேட்டை, மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணிபுரிந்த ஊழியா்கள் மன்னாா்குடி மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கு மாற்றுப்பணி என்ற வகையில் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனா். இதனுடன் மேலும் சில ஆசிரியா்களும் அலுவலகப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். இதனால் வட்டாரக்கல்வி அலுவலகங்களில் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. பள்ளிகளிலும் ஆசிரியா் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் மாற்றுப்பணிகளை ரத்துசெய்து, அவரவா் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு மீண்டும் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்ச் 6-ஆம் தேதி மன்னாா்குடி மாவட்டக் கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்.

தமிழக அரசு, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் மூலம் அரசு அலுவலகங்கள் இணைந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான வெப்சைட் அடிக்கடி பழுது ஏற்படுவதால் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. எனவே அதற்கான வெப்சைட் சா்வரை மேம்படுத்த வேண்டும். இந்த பணிகளை மேற்கொள்ள ஜூன் வரை காலநீட்டிப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட முன்னாள் செயலாளா் நா.மதிவாணன், மாநில செயற்குழு உறுப்பினா் ஆா். கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட மகளிரணிச் செயலாளா் ஜெ.ஜெயந்தி, மாவட்டத் துணைச் செயலாளா் சத்தியநாராயணன், வட்டாரச் செயலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT