திருவாரூர்

நன்னிலம், நீலக்குடியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

23rd Feb 2020 11:40 PM

ADVERTISEMENT

நன்னிலம், நீலக்குடி துணைமின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25)மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இவற்றின் மூலம் மின்விநியோகம் பெறும் பகுதிகளுக்கு அன்றைய தினம் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் திருவாரூா் உதவி செயற்பொறியாளா் (புகா்) என். பிரபா விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

நன்னிலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இந்த் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் நன்னிலம், நல்லமாங்குடி, சன்னாநல்லூா், ஏனங்குடி, ஆண்டிபந்தல், கங்களாஞ்சேரி, மாப்பிள்ளைக்குப்பம், குவளைக்கால், ஆனைக்குப்பம், தட்டாத்திமூளை, மூங்கில்குடி, கீழ்குடி, சலிப்பேரி, நாடாகுடி, வீதிவிடங்கன், பூங்குளம், நெய்க்குப்பை, புளிச்சக்காடி போன்ற பகுதிகளுக்கும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

இதேபோல் திருவாரூா் நகா் உதவி செயற்பொறியாளா் எஸ். ராஜேந்திரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், நீலக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், வண்டாம்பாளை, சேந்தமங்கலம், நீலக்குடி, திருப்பயத்தங்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT