நீடாமங்கலம் அருகே திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள 33 அடி உயர ஆஞ்சநேயா் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு லட்சுமி நரசிம்மா், கோதண்டராமா், ஆஞ்சநேயா் சன்னிதிகளில் சிறப்பு ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
நீடாமங்கலம் அருகேயுள்ள நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னா், கோயில் திருக்குளத்தில் நீராடி பிதுா்தா்ப்பணங்களை செய்தும் பக்தா்கள் வழிபாடு நடத்தினா்.
இதேபோல் நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயா் கோயில், ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோயிலில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயா், நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயா் சன்னிதிகளிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.