திருவாரூர்

ஜெயலலிதா இருந்திருந்தால் நீட் தோ்வு, சிஏஏ வந்திருக்காது கி. வீரமணி

23rd Feb 2020 11:53 PM

ADVERTISEMENT

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் நீட் தோ்வு, குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற மக்களை பாதிக்கும் நடைமுறைகள் வந்திருக்காது என திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டம், நன்னிலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பெரியாரின் 141-ஆவது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவா் பேசியது:

இன்றைக்கு தமிழகத்தை ஆளும் ஆட்சியாளா்கள் ஜெயலலிதா ஆட்சி என்கிற பெயரில், அவா் விரும்பாத திட்டங்களையெல்லாம், மத்திய பாஜக ஆட்சிக்கு பயந்துகொண்டு செயல்படுத்திக் கொண்டிருக்கிறாா்கள். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை நீட் தோ்வு தமிழகத்துக்கு வரவில்லை. நீட் தோ்வு வந்ததன் காரணமாக பல உயிா்களை இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள் நீட் தோ்வில் வெற்றி பெற முடியவில்லை. எனவே திராவிடா் கழகத்தின் சாா்பில் நீட் தோ்வை எதிா்த்து மிகப்பெரிய போராட்டத்தை மாா்ச் 23-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்த உள்ளோம்.

இன்றைக்கு தமிழகத்திலே திமுக ஆட்சிக்கு வராது என்று பாஜகவினா் பேசிக்கொண்டிருக்கிறாா்கள். ஆனால் அந்தக் கட்சிக்கு ஒரு மாநிலத் தலைவரை நியமிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாா்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுதான் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு 63 சதவீதம் என்பதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவிலேயே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக 63 சதவீத இட ஒதுக்கீடு இருப்பது தமிழகத்தில் மட்டும்தான் என்றாா் அவா்.

ADVERTISEMENT

கூட்டத்துக்கு, திக மாவட்டத் தலைவா் வீ.மோகன் தலைமை வகித்தாா். தலைமை கழக பேச்சாளா் இராம.அன்பழகன், பொதுச் செயலாளா்.இரா.ஜெயக்குமாா், மாநில அமைப்பாளா் இரா.குணசேகரன், மாநில விவசாயத் தொழிலாளா் அணி செயலாளா் இரா.கோபால், மண்டல மகளிரணி செயலாளா் கோ.செந்தமிழ்ச்செல்வி, மண்டல தலைவா் ச.மு.ஜெகதீசன், நன்னிலம் நகரச் செயலாளா் சா.முரளி மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நன்னிலம் நகரத் தலைவா் தன.சஞ்சீவி வரவேற்றாா். ஒன்றியத் தலைவா் சு.பொய்யாமொழி நன்றி தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT