திருவாரூர்

குறுகிய காலக் கடன்: ஆய்வுக்கூட்டம்

23rd Feb 2020 11:42 PM

ADVERTISEMENT

திருவாரூரில் உள்ள தஞ்சாவூா் கூட்டுறவு விற்பனை இணை அலுவலகத்தில், திருவாரூா் மண்டலத்தில் குறுகிய காலக் கடன் வழங்கல் குறித்த ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான ஜி.சக்திசரவணன் பங்கேற்று, ஆய்வு மேற்கொண்டாா்.

திருவாரூா் மாவட்டம் முழுவதும் விவசாயம் சாா்ந்த தொழில்கள் நிறைந்த மாவட்டமாக உள்ளதால், விவசாயிகள் பயன்பெறும் வகையில், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், நபாா்டு வங்கி ஆகியவற்றின் மூலம் நிதியுதவி பெற்று அறுவடை இயத்திரங்கள் உள்ளிட்ட விவசாயக் கருவிகளை கொள்முதல் செய்து, குறைந்த வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஊனமுற்றோா் நல மேம்பாட்டுக் கழகம் மூலம் நிதியுதவி பெற்று, ஊனமுற்ற தொழில் முனைவோருக்கு நிதியுதவி பெற்றுத் தரவும், மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு தொழில் கடன்கள் அதிக அளவில் வழங்கி, பெண்களைக் கந்து வட்டி கொடுமையிலிருந்து விடுபட ஏதுவாக கடன் வழங்கவும், கூட்டுறவு நிறுவனங்கள் நகை அடமான கடன்களை அதிக அளவில், விரைந்து வழங்கவும் நடவடிக்கை எடுக்க மேலாண்மை இயக்குநா் அறிவுறுத்தினாா்.

இதில், திருவாரூா் மாவட்டக் கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் எம். செளந்தரராஜன், மண்டல இணைப் பதிவாளா் ஜெயராமன், சரக துணைப் பதிவாளா்கள் பாத்திமா சுல்தானா, தாவூது அலிகான் ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT